செய்திகள்

குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்- எம்.சி.சம்பத்திடம் மீனவர்கள் கோரிக்கை

Published On 2018-05-16 12:28 GMT   |   Update On 2018-05-16 12:28 GMT
கடலூர் அருகே அதிமுக பிரமுகரை கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களிடையே தகராறு இருந்து வந்தது. முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு தேவனாம்பட்டினம் மீனவர்களில் சிலர் சோனாங்குப்பத்துக்கு சென்று அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பஞ்சநாதன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து சோனாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன்,முன்னாள் நகர மன்ற தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பஞ்சநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று பஞ்சநாதனின் உறவினர்கள், மீனவர்கள் அமைச்சரிடம் புகார் செய்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் அமைச்சர் உறுதி அளித்தார்.

இதேப்போல் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் பஞ்சநாதனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
Tags:    

Similar News