செய்திகள்

கந்துவட்டி தொல்லை - கும்பகோணத்தில் ஜாமீன் கையெழுத்து போட்ட வாலிபர் வி‌ஷம் குடித்தார்

Published On 2018-05-16 11:58 GMT   |   Update On 2018-05-16 11:58 GMT
கும்பகோணத்தில் கந்துவட்டிகாரர்கள் கொடுமையால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருநீலக்குடி, சீனிவாச நல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனது நண்பர் ஒருவர் கந்துவட்டிகாரர்களிடம் கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது நண்பர் கடந்த 2 மாதம் முன்பு இறந்துவிட்டார். இதனால் கந்துவட்டி காரர்கள் ரமேசிடம் சென்று பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அவர் கடந்த 2 மாதமாக வேறு சிலரிடம் பணம் வட்டிக்கு வாங்கி மாதம் ரூ.2½ லட்சம் வட்டி கட்டி வந்துள்ளார்.

கடந்த மாதம் வட்டி கட்ட முடியாமல் இருந்தபோது கந்துவட்டிகாரர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்ததால் அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர்.

இந்நிலையில் கடன்வாங்கி இறந்த தனது நண்பர் வீட்டுக்கு கந்துவட்டி காரர்களை ரமேஷ் அழைத்து சென்றுள்ளார். அப்போது நண்பரின் மனைவி தனது கணவர் வாங்கிய கடனை சொத்துக்களை விற்று கட்டி விடுவதாக கூறியுள்ளார். அதற்கு சில காலமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் கந்துவட்டிகாரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் நேற்று மீண்டும் ரமேசிடம் நீதான் பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும். இல்லையென்றால் மாதம் தவறாமல் ரூ.2½ லட்சம் தர வேண்டும் என்று டார்ச்சர் செய்யதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரமேஷ் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ரமேசை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News