செய்திகள்
வேதாரண்யத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
வேதாரண்யத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேலு மற்றும் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேதாரண்யம் கரியாப்பட்டினம் சாலையில் வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் எந்தவித அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவர் மதியழகன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.