செய்திகள்

எதையும் தாங்கும் இதயத்துடன் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் - வைத்திலிங்கம் எம்.பி.

Published On 2018-05-05 13:16 IST   |   Update On 2018-05-05 13:16:00 IST
எதையும் தாங்கும் இதயத்துடன் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #NEETExam #NEET #TNstudents

தஞ்சாவூர்:

தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகவிற்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு திறக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டினால் கர்நாடகாவிற்கு கடும் விளைவுகள் ஏற்பட கூடும்.

தமிழக மாணவர்கள் தமிழகத்தில் தான் நீட் தேர்வு எழுத வேண்டும். வெளி மாநிலங்களுக்கு சென்று தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதை ஏற்க முடியாது. இது மாணவர்களுக்கு வருத்தத்தையும், மன உளைச்சலையும் அளிக்கிறது. வெளி மாநிலங்ளில் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும.

இவ்வாறு அவர் கூறினார். #NEETExam #NEET #TNstudents

Similar News