செய்திகள்

பெருந்துறை அருகே வெறி நாய்கள் கடித்து குதறி மான் குட்டி பலி

Published On 2018-05-03 22:37 IST   |   Update On 2018-05-03 22:37:00 IST
பெருந்துறை அருகே மேய்ந்து கொண்டிருந்த மான் குட்டியை வெறி நாய்கள் கடித்து கொன்றது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பெருந்துறை:

பெருந்துறை அடுத்த சேனடோரியம் ஐஆர்டி மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி கல்லூரியையொட்டி அமைந்ததுள்ளது.

இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. குன்னத்தூர் ரோடு அருகே உள்ள வனப்பகுதியில் நாய்கள் புகுந்தது.

அந்த நாய்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த மான்கள் கூட்டத்தில் இருந்து ஒரு மான் குட்டியை கவ்வி பிடித்து கொண்டு சென்றது. அந்த மானை நாய்கள் கடித்து குதறின.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த நாயை விரட்டினர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் கோபால் மான் குட்டியை பரிசோதனை செய்தார். அப்போது அந்த மான் இறந்தது தெரியவந்தது. பிறகு அந்த மான்குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பின்னர் அதே பகுதியில் புதைத்தனர்.

இறந்த இந்த பெண் மான் குட்டி பிறந்து 3 மாதங்களே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Similar News