செய்திகள்

பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-05-03 06:09 GMT   |   Update On 2018-05-03 06:09 GMT
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. #TNEA2018 #Engineering #TNEAOnlineCounselling
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த அரசு முடிவு செய்தது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அடுத்த மாதம் ஆன்லைன் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.

இந்நிலையில், ஆன்லைன் கலந்தாய்வுக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ஆன்லைன் கலந்தாய்வால் கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் கலந்தாய்வுடன் பழைய முறையையும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.  இதேபோல் வழக்கறிஞர் பொன் பாண்டியனும் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. #TNEA2018 #Engineering #AnnaUniversity #TNEAOnlineCounselling
Tags:    

Similar News