செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவியுடன் மேலும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு

Published On 2018-05-03 04:26 GMT   |   Update On 2018-05-03 04:26 GMT
பேராசிரியை நிர்மலாதேவியுடன் மேலும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது. #NirmalaDevi #CBCID #NirmalaDeviCase
மதுரை:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலரிடம், சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நிர்மலா தேவியுடன் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரையும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

நிர்மலா தேவி பயன்படுத்திய செல்போன் மற்றும் அவரது வீட்டில் சிக்கிய ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி யாருக்காக கல்லூரி மாணவிகளிடம் பேசினார்? நிர்மலா தேவியை தூண்டிவிட்டது யார்? என்பது போன்ற பல்வேறு வியூகங்களுக்கும் விடை கிடைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


இதுவரை நடத்தப்பட்ட விசாரணை வாக்கு மூலங்கள் மற்றும் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இடைக்கால குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில் இன்னும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அவர்களது பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர்களை விசாரணைக்கு அழைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.

நிர்மலா தேவியுடனான தொடர்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். #NirmalaDeviAudio #NirmalaDeviCase
Tags:    

Similar News