செய்திகள்

படப்பையில் மு.க.ஸ்டாலின் நடத்தும் மாநில சுயாட்சி மாநாடு

Published On 2018-05-01 09:34 GMT   |   Update On 2018-05-01 09:34 GMT
சென்னையை அடுத்த படப்பையில் மு.க.ஸ்டாலின் நடத்தும் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அனைத்துக்கட்சி தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சென்னை வந்து சந்தித்து பேசியது அரசியல் மாற்றத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே பிரதமர் மோடிக்கு எதிராக மாநில கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை ஆதரிப்பதாக கூறிய மு.க.ஸ்டாலினை சந்திரசேகரராவ் சந்தித்தது 3-வது அணிக்கு அச்சாரமாகவே அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்ததும் மக்களுடைய பிரச்சனைகளை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். அது மட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிராக தி.மு.க.வினர் சென்னையில் கருப்பு கொடி போராட்டமும் நடத்தினார்கள்.

இதன் அடுத்த கட்டமாக பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை பாதுகாக்கும் தேசிய அளவிலான மாநில சுயாட்சி மாநாட்டை மு.க.ஸ்டாலின் சென்னையில் நடத்த உள்ளார்.

சென்னையை அடுத்த படப்பை கரசங்காலில் அடுத்த மாதம் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளில் மு.க.ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

1989-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தியது போன்று, அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு அமையும் என தி.மு.க. முன்னணி நிர்வாகி தெரிவித்தார். #DMK #MKStalin
Tags:    

Similar News