செய்திகள்
வாடிப்பட்டி அருகே கல்குவாரியில் மண் சரிந்து விபத்து- 3 பேர் பலி
தொழிலாளர் தினமான இன்று 3 தொழிலாளர்கள் மண் சரிந்து விழுந்து பலியான சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டியில் ரமேஷ் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஏராளமானோர் வேலை செய்வார்கள்.
இன்று காலை குலசேகரன்கோட்டையை சேர்ந்த பரமசிவம் (வயது45), பூச்சம்பட்டி நாகராஜ் (54), கிருஷ்ணன் (45), சீனிவாசன் (48) ஆகியோர் கற்களை தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. 4 பேரும் மண்ணுக்குள் புதைந்ததை கண்ட சக தொழிலாளர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் பரமசிவம் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இறந்தார். மற்ற 3 பேரை சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நாகராஜ், கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தனர். சீனிவாசன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews