செய்திகள்

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Published On 2018-05-01 11:14 IST   |   Update On 2018-05-01 11:14:00 IST
நடிகர் அஜித்குமாருக்கு தான் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan #HBDThalaAjith
சென்னை:

நடிகர் அஜித்குமாருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்திருப்பதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக செங்கோட்டையன் டுவிட்டர் பக்கத்தில் அவர் வாழ்த்து கூறியது போல பதிவிடப்பட்டிருந்தது.

அமைச்சர் செங்கோட்டையன் திடீரென அஜித் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறாரே என்று, அவரது டுவிட்டர் பக்கத்தை பார்த்து பலரும் வியந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அது வேறு ஒருவரால் பதிவிடப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து என்பதும், அஜித்குமாருக்கு, செங்கோட்டையன் பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அஜித்குமாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். எனக்கு தெரியாமல் யாரோ எனது டுவிட்டர் பக்கத்தில் நான் பதிவிட்டது போல வாழ்த்து கருத்தை தெரிவித்துள்ளனர் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். #TNMinister #Sengottaiyan #HBDThalaAjith

Similar News