செய்திகள்

தேவகோட்டையில் தொடர் திருட்டு: வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை

Published On 2018-04-23 16:24 GMT   |   Update On 2018-04-23 16:24 GMT
தேவகோட்டையில் பூட்டிய 2 வீடுகளை உடைத்து நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருச்சி -ராமேசுவரம் நெடுஞ்சாலை ஓரத்தில் ஸ்டேட் பேங்க் காலனி உள்ளது. இங்கு வசித்து வருபவர் சீத்தாராமன் (வயது60). நகைப்பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இவரது மூத்த மகன் ராஜசேகர் பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். அவர் தந்தை வீட்டின் வழியாக நடந்து வந்தபோது வீடு திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே சென்றார். இதுகுறித்து தந்தைக்கும் தகவல் தெரிவித்தார்.

அப்போது வீட்டின் கதவை உடைத்து அங்கு இருந்த 5 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது.

இதேபோல் தேவகோட்டை நகைக்கடை வீதியை சேர்ந்தவர் செல்வி (45). இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார்.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடந்ததை பார்த்து செல்விக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்துவிளக்குகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

மேற்கண்ட 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் குற்ற வாளிகளின் தடயங்களை சேகரித்தனர்.

தேவகோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 கடைகள், 2 வீடுகளை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது போலீசாருக்கு விடப்பட்ட சவால் போன்று தெரிகிறது என்று பொதுமக்கள் பரவலாக பேசி கொண்டனர்.

Tags:    

Similar News