செய்திகள்

சீர்காழியில் 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு- பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2018-04-21 14:40 GMT   |   Update On 2018-04-21 14:40 GMT
பாரத பிரதமரின் உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் சீர்காழியில் 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பை பி.வி.பாரதி எம்.எல்.ஏ வழங்கினார்.
சீர்காழி:

பாரத பிரதமரின் உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடுப்புடன் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி பி.வி.பாரதி எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது.

சீர்காழி தாசில்தார் பாலமுருகன், முன்னிலை வகித்தார். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி பங்கேற்று 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றுடன் கூடிய கியாஸ் இணைப்பை வழங்கி பேசுகையில், மத்தியஅரசு கிராமப்புற வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பை வழங்கிவருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் பாதுகாப்பாக கியாஸ் அடுப்பை பயன்படுத்தி, மாசு இல்லா நிலையை ஏற்படுத்தவேண்டும் என்றார். அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, மாவட்ட பேரவை செயலாளர் கே.எம்.நற்குணன், பேரூர் செயலாளர் போகர்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இன்டேன் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் உதயக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். முன்னதாக பாதுகாப்பாக கியாஸ் அடுப்பினை உபயோகிப்பது குறித்தும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் செயல்முறை விளக்கத்தினை சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் செய்து காட்சினார். #tamilnews
Tags:    

Similar News