செய்திகள்

திருப்பத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

Published On 2018-04-20 13:50 IST   |   Update On 2018-04-20 13:50:00 IST
திருப்பத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள மு.கோவிலாப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

கடந்த 6-ம் தேதி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அன்றிலிருந்து அந்த சிறுமி உடல் சோர்வாக இருந்துள்ளார். இதனால் பெற்றோர் வயிற்றில் தொங்கல் எதுவும் விழுந்திருக்குமோ, அல்லது வேறு எதுவும் உடல்நிலை பிரச்சினையா? என மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

முத்துக்குமாரின் இந்த கேடுகெட்ட செயலை அவரது அக்கா மகள் பார்த்துள்ளார். இந்த சிறுமியும் ஒரே வகுப் பறையில் படிப்பதால் இந்த சம்பவத்தை பள்ளியில் சொல்ல, இதைக்கேட்ட சிறுமிகள் வீட்டில் கூறினர்.

இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் காதுக்கு சென்றது. பதறிப்போன தாய் இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் வாலிபர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News