செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமில் 4 வீடுகளில் ஓடுகள் விழுந்து பெண் உள்பட 2 பேர் படுகாயம்

Published On 2018-04-09 14:44 GMT   |   Update On 2018-04-09 14:44 GMT
அறந்தாங்கி அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் 4 வீடுகளில் ஓடுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாம் 1990-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போது இந்த முகாமில் 233 வீடுகளில் 1700 அகதிகள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளில் கடந்த 2008-ஆம் ஆண்டு 58 ஓட்டு வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் வீடுகள் பழுது பார்க்கப்படாததால், வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. 

இந்த வீடுகளில் நடராஜன், ஜனார்த்தனன், சுப்பிரமணியன், இந்திராணி ஆகிய 4 பேரின் வீடுகளில் உள்ள ஓடுகள் நேற்று திடீரென்று பெயர்ந்து விழுந்தன. ஓடுகள் பெயர்ந்து விழுந்ததில் நடராஜன், இந்தி ராணி ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற வீடுகளில் ஓடுகள் பெயர்ந்து விழுந்த போது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. 

அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் 4 வீடு களில் ஓடுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News