செய்திகள்

கடலூரில் விபத்து- புதுவை கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி பலி

Published On 2018-03-30 16:38 IST   |   Update On 2018-03-30 16:38:00 IST
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பவளநகரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(வயது54). உதவி சப்-இன்ஸ்பெக்டரான இவர் புதுவை கவர்னர் கிரண்பேடியின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை புதுவையில் இருந்து கடலூர் புறப்பட்டார்.

செம்மண்டலம் அருகே சென்ற போது, அவர் மீது அந்த வழியாக வந்த வேன் திடீரென மோதியது. இதில் கிருஷ்ணராஜீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Similar News