செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்- தமிமுன் அன்சாரி, எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தல்

Published On 2018-03-29 01:42 GMT   |   Update On 2018-03-29 01:42 GMT
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிமுன் அன்சாரி, எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தியுள்ளனர். #BanSterlite #TalkAboutSterlite
சென்னை:

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால், அந்த மாவட்டத்தின் மண் வளம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கடும் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதன் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மண் வளமும், மக்கள் நலமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடி வருகின்றனர். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்றே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். எனவே இக்கோரிக்கைக்காக போராடும் பொதுமக்களின் எழுச்சிகரமான போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிக்கிறது. நிரந்தரமாக இந்த ஆலையை மூடுவது குறித்து தமிழக அரசு துரிதமாக முடிவெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். #tamilnews #BanSterlite #TalkAboutSterlite
Tags:    

Similar News