செய்திகள்
காட்டுமன்னார்கோவில் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 60) அதே பகுதியில் கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது மொபட்டில் விறகு ஏற்றிக்கொண்டு ஓட்டலுக்கு சென்றார்.
அறிவழகனை தொடர்ந்து பின்னால் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த கார்த்தி (30) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் ஹாரன் அடித்தார். ஆனால் அறிவழகன் வழிவிடவில்லை. இதையடுத்து கார்த்தி வேகமாக முன்னால் சென்று அறிவழகனை மறித்தார்.
அப்போது ஹாரன் அடித்தும் ஏன் வழிவிடவில்லை என கூறி அறிவழகனிடம் வாக்குவாதம் செய்தார். இதில் கார்த்தி ஆத்திரமடைந்து விறகு கட்டையால் அறிவழகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் அறிவழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தார். #Tamilnews