செய்திகள்
மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

மயிலாடுதுறையில் பெரியார் சிலை உடைப்பை கண்டித்து மறியல்

Published On 2018-03-21 04:49 GMT   |   Update On 2018-03-21 04:49 GMT
மயிலாடுதுறையில் பெரியார் சிலை உடைப்பை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேராசிரியர் ஜெயராமன் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விடுதி கிராமத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் ராமர் படத்தை செருப்பால் அடித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட 14 பேரை மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் நடந்த போராட்டத்தில் பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News