செய்திகள்

விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2018-03-19 22:01 IST   |   Update On 2018-03-19 22:01:00 IST
விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினரும் படுகாயமடைந்தார்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகவேல் (வயது 36). மருவாய் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் பிரசாந்த்(20). உறவினர்களான இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று புதுக்கூரைப்பேட்டை காளியம்மன் கோவில் அருகே உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான எள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.

அப்போது வயலில் உள்ள மின்மாற்றியில் இருந்து பூமியில் புதைக்கப்பட்டிருந்த கம்பியை தொட்ட பிரசாந்தை மின்சாரம் தாக்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முருகவேல், பிரசாந்த்தை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முருகவேலை, அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகவேலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News