செய்திகள்

கருங்கல்பாளையத்தில் வி‌ஷம் குடித்து ரோட்டில் பிணமாக கிடந்த வாலிபர்

Published On 2018-03-18 21:28 IST   |   Update On 2018-03-18 21:28:00 IST
ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோட்டில் இன்று காலை ஒரு வாலிபர் ரோட்டில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோட்டில் இன்று காலை ஒரு வாலிபர் ரோட்டில் இறந்து கிடந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் செல்போன் இருந்தது. அதை எடுத்து அதில் இருந்து போன் எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். பிறகு விசாரணை நடத்தினர். அவர் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஞானகுருசாமி மகன் கண்ணன் என தெரியவந்தது. அவர் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த தாகவும் அவர் வி‌ஷம் குடித்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எதற்காக வி‌ஷம் குடித்தார்? என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். 

Similar News