செய்திகள்
சிவகிரி அருகே 2 மொபட்டுகள் மோதல்- தொழிலாளி படுகாயம்
சிவகிரி அருகே இரண்டு மொபட்டுகள் திடீரென மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). கூலி தொழிலாளி.
இவர் தாண்டாம் பாளையத்துக்கு பெரிய காரிய நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வள்ளியம்பாளையம் பிரிவில் வந்த போது அவருக்கு முன்னால் மற்றொருவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
முன்னால் சென்றவர் எந்தவித சைகையும் காட்டாமல் திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் இருவாகனங்களும் திடீரென மோதி கொண்டது.
இதில் நடராஜன் மொட்டில் இருந்து கீழேவிழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews