செய்திகள்
கடலூர் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
கடலூர் அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கடலூர்:
கடலூரை அடுத்த புலியூர் காலனியை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). தொழிலாளி. இவர் நேற்று இரவு கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த பஸ் திடீரென்று சங்கர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சங்கர் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews