செய்திகள்

தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-03-14 15:18 IST   |   Update On 2018-03-14 15:18:00 IST
வீட்டுக்கு தாமதமாக வந்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு அபிநயா(வயது 12) என்ற மகள் இருந்தாள். இவர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலையில் அபிநயா தனது தோழிகளுடன் கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு தாமதமாக வந்தார். ஏன் தாமதமாக வந்தாய் என அபிநயாவை அவரது தாய் சுமதி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த அபிநயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அபிநயா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News