செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி- பிடிபட்ட 3 பேரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Published On 2018-03-02 19:33 IST   |   Update On 2018-03-02 19:33:00 IST
ஈரோடு மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு கைதாகிய 3 பேரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

திருப்பூர் மாவட்டம், முத்தூர் கரட்டுப்பாளையம், ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் அருண். இவரது உறவினர் ஈரோடு மரப்பாளையத்தை சேர்ந்த ஜோதிரா. இவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.31 லட்சம் பெற்று 5 பேர் கொண்ட கும்பல் மோசடியில் ஈடுப்பட்டது.

இது குறித்து அருண் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு கொடுமுடி நல்லசெல்லி பாளையம் ராஜேந்திரன் (29), பவானியை சேர்ந்த முனியப்பன் (28), ஈரோடு பெரிய சேமூரை சேர்ந்த சித்திக் (29), நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த சுலைமான் (27), சித்திக் மனைவி ஆயிஷா (27) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் துப்புரவு பணியாளர் கண்ணம்மாள் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது.-

முனியப்பன், கலைமான், ஆயிஷா ஆகிய மூவருக்கும் தான் பணம் மறைத்து வைக்கப்பட்ட இடம், மற்றும் யார் யாருக்கெல்லாம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?. இந்த மோசடிக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்துள்ளனர்? என்ற விவரம் தெரியும். எனவே அவர்கள் மூவரையும் மூன்று நாள் காவல் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த மோசடி கும்பலுக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் சிலர் உதவி உள்ளனர். அவர்கள் யார்? என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறோம். அவர்கள் விரைவில் சிக்குவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Similar News