செய்திகள்

குடித்து விட்டு ரகளை- மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தந்தை

Published On 2018-03-02 19:16 IST   |   Update On 2018-03-02 19:16:00 IST
மது குடித்து ரகளை செய்து வந்த மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 46). இவரது மகன் ஜீவா பத்மநாபன் (25) கூலி தொழிலாளியான இவருக்கு மது பழக்கம் இருந்தது.  இதனால், வேலைக்கு சரியாக போகாமல் குடித்து விட்டு ஊரை சுற்றி வந்துள்ளார்.

இதையொட்டி அவரது தந்தை சத்தம் போட்டார். வேலைக்கு போகாமல் இப்படி குடித்து விட்டு வந்து ரகளை செய்கிறாயே... ஒழுங்காக இருக்க மாட்டாயா? என்று கேட்டு திட்டுவராம். இதனால் அவர்களிடையே தகராறு இருந்து வந்தது.

நேற்று இரவும் தந்தை- மகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டு முற்றியது. ஆத்திரம் அடைந்த தந்தை முருகதாஸ் வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் ஊதுகோலால் (இரும்பு கம்பி) சரமாரியாக அடித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஜீவா பத்மநாபன் மயங்கி சரிந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்தி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இது குறித்து சிதோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ஜீவா பத்மநாபன் உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News