செய்திகள்

நாளை மறுநாள் பிளஸ்-2 தேர்வு: மீண்டும் முதலிடம் பிடிக்க ஈரோடு மாணவர்கள் ஆர்வம்

Published On 2018-02-27 15:03 IST   |   Update On 2018-02-27 15:03:00 IST
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக படித்து வருகிறார்கள். மீண்டும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்களா? என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:

பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்விதுறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக மாட்ட முழுவதும் 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத மாணவ- மாணவிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே தயாராகி விட்டார்கள். இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இரவு-பகல் பாராமல் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் படித்து வருகிறார்கள்.

பரீட்சை எழுத மாணவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகள் தயார்படுத்தி வருகிறார்கள். மேலும் சிறப்பு பயிற்சியும் அளித்து வருகிறார்கள்.

பிளஸ்-2 பரீட்சைக்கான வினாத்தாள்கள் வந்து அவை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. வினாதாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

பரீட்சை ஹாலில் எவ்வாறு பணிபுரிய வேண்டும்? என ஆசிரியர்- ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கவும் பிடிக்கவும் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் திடீர்..திடீரென பரீட்சை நடக்கும் ஹாலுக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளனர்.

பொது தேர்வு என்றாலே ஈரோடு மாவட்ட மாணவர்கள் தான் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்று வந்தார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டாக பின்னுக்கு சென்று விட்டார்கள். இந்த ஆண்டு மீண்டும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்களா? என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Similar News