செய்திகள்

இலங்கைக்கு என்ஜீன்களை கடத்த முயன்ற 3 பேருக்கு 2 ஆண்டு சிறை: அறந்தாங்கி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-02-22 17:05 IST   |   Update On 2018-02-22 17:05:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு என்ஜின் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அறந்தாங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அறந்தாங்கி:

கடந்த 2008 ஜூலை 22-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்டுமாவடி பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பயன்படுத்த அதிக பவர் கொண்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 5 என்ஜீன்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

அந்த தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற க்யூ பிரிவு போலீசார் ஆய்வில் ஈடுபட்ட போது 5 என்ஜீன்களை இலங்கைக்கு கடத்தவுள்ளதை உறுதி செய்து அந்த என்ஜீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்த முயன்றவர்களான சென்னை கீழ்பாக்கம் ரெங்க நாதன் மகன் குமரகுருபரன் (வயது 38), கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஜெயசீலன்(45), ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் சாமித்துரை(42) ஆகியோர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக கடந்த 10 வருடங்களாக அறந்தாங்கி குற்றவியல் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று குற்றவியல் மாஜிஸ்திரேட் கலையரசி ரீனா, வழக்கினை விசாரித்து அனைத்து வாதங்களை உறுதி செய்து இதில் ஈடுபட்ட 3 பேர்களுக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #Tamilnews

Similar News