செய்திகள்

பவானி அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-02-07 16:29 IST   |   Update On 2018-02-07 16:29:00 IST
பவானி அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி:

பவானி அடுத்த ஜம்பை பெரியமோளபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 20). இவர் சித்தோடு அருகே கங்காபுரத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாய் பூங்கொடியுடன் வசித்து வந்தார். இவரது தந்தை முருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில் தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிறு மூலம் திடீரென தூக்கு போட்டு கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். தமிழ்செல்வன் எதற்காக தூக்குபோட்டு இறந்தார் என உடனடியாக தெரிய வில்லை. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

Similar News