செய்திகள்

ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பஸ் பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும்: போக்குவரத்து துறை

Published On 2018-01-29 09:40 IST   |   Update On 2018-01-29 09:40:00 IST
ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பஸ் பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியினை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் (அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்), கட்டணமில்லா பயணச் சலுகையும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) பயிலும் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2013-2014-ம் ஆண்டு முதல் சமுதாயக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சிக் கூடங்கள், இசைக் கல்லூரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மேற்படி கட்டணமில்லா பயணச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள், தனியார் தொழில்நுட்ப பயிலகங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 50 சதவீத பயண கட்டணச் சலுகை பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. பஸ் கட்டணத்தை மாற்றியமைத்த பின்பும் மாணவர்கள் சிரமமின்றி பயணம் செய்யும் பொருட்டு, மேற்படி பயணச் சலுகை அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பஸ் அட்டைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பஸ் பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

Similar News