செய்திகள்
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வாகன நெருக்கடி

Published On 2018-01-28 10:48 GMT   |   Update On 2018-01-28 10:48 GMT
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக முக்கிய சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக முக்கிய சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குடியரசு தினத்தில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை காரணமாக வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை எங்கு நிறுத்துவது? என தெரியாமல் சிரமப்பட்டனர். மலைச்சாலையில் இருந்தே வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

மேலும் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அனைத்து ஓட்டல்கள் மற்றும் தங்கு விடுதிகளும் நிரம்பி வழிந்தன. தனியார் காட்டேஜ்களிலும், சிறிய ஓட்டல்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. ஏரிகளில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

காலையில் பனி மூட்டத்துடன் தென்பட்ட இயற்கை அழகில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். #tamilnews
Tags:    

Similar News