செய்திகள்

பஸ் கட்டண உயர்வை மனநிறைவுடன் அரசு அமல்படுத்தவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

Published On 2018-01-21 17:25 IST   |   Update On 2018-01-21 17:25:00 IST
தவிர்க்க முடியாத காரணத்தால் தான் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். #busfarehike #ministerosmanian #tngovt

வேதாரண்யம்:

நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தவிர்க்க முடியாத காரணத்தால் தான் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கட்டணம் உயர்த்தப்பட்டது.

அரசு போக்குவரத்து கழகத்தின் பொருளாதார சுமை, எரிபொருள் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலையேற்றம் போன்றவைகளால் வேறு வழியின்றி தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

மனநினைவுடன் தமிழக அரசு பஸ்கட்டணத்தை அமல்படுத்த வில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #busfarehike #ministerosmanian

Similar News