செய்திகள்

பட்டு நூல் விலையை குறைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2018-01-16 09:33 GMT   |   Update On 2018-01-16 09:33 GMT
கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நலன் கருதி பட்டு நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் தாங்கள் தயாரிக்கும் பட்டுத்துணிக்கான பட்டு நூலின் விலை உயர்ந்திருந்தும், பட்டுத் துணிகளின் விலை உயராமல் நஷ்டம் அடைவதை சுட்டிக்காட்டி பட்டு நூலின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் வேலை நிறுத்தத்தால் பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களும் வேலையின்றி, பொருளாதரம் இன்றி கஷ்டப்படுவார்கள். கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நலன் கருதி பட்டு நூல் விலையைக் குறைத்திடவும், கைத்தறி நெசவுத்தொழிலை ஊக்கப்படுத்திடவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilNews
Tags:    

Similar News