செய்திகள்
செந்துறை அருகே அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது
செந்துறை அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் பிரஹஸ்பதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராயம்புரத்தில் இருந்து சென்னிவனம் செல்லும் சாலையில் மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு திருட்டு தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த கீழாயம்புரம் கிராமத்தில் சேர்ந்த வீரப்பன வயது (வயது 48), முருகேசன் மகன் ரமேஷ் வயது (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் செந்துறை, சென்னிவனம், ராயபுரம் பகுதிகளில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க காவல் துறையினர் முன் வர வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.