செய்திகள்

சூலூர் அருகே ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை-பணம் திருட்டு

Published On 2017-12-28 11:58 GMT   |   Update On 2017-12-28 11:58 GMT
சூலூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் இந்திரா நகரை சேர்ந்தவர் இவாஞ்சலின் பிரசில்லா. இவர் பல்லடம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 25-ந் தேதி இவாஞ்சலின் பிரசில்லா தனது 2 மகள்களுடன் கேரள மாநிலம் சாலக்குடி சென்று விட்டார். இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இந்த கோழிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தினமும் தீவனம் வைத்து வருகின்றார். அதன் படி இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் கோழிக்கு தீவனம் வைக்க இவாஞ்சலின் பிரசில்லா வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கேரளா சென்றுள்ள இவாஞ்சலின் பிரசில்லாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தனது நண்பரை அணுகி வீட்டிற்கு வந்து பார்க்க சொன்னார்.

அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. ஆனாலும் இவாஞ்சலின் பிரசில்லா வந்த பின்னர் தான் திருட்டு போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரிய வரும். இந்த திருட்டு குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேக ரித்தனர். நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News