செய்திகள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவில் கோவில்களை திறக்க தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Published On 2017-12-28 09:14 IST   |   Update On 2017-12-28 09:14:00 IST
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவில் கோவில்களை திறக்க தடை கேட்டு தொடர்ந்த பொதுநல மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதிகளின் படி இரவு நேரத்தில் கோவில்களை திறந்து வைக்கக்கூடாது. 

இரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையை திறக்க வேண்டும் என்று நம் மூதாதையர் இந்த நடைமுறையை உருவாக்கி பின்பற்றி வருகின்றனர். 

ஆனால், அண்மை காலங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவில்களை திறக்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

Similar News