செய்திகள்

மீனவர்கள் இறப்பை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-12-18 13:11 GMT   |   Update On 2017-12-18 13:11 GMT
தமிழக மீனவர்கள் இறப்பை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்:

அரியலூர் பேருந்து நிலையம் அருகே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக மீனவர்கள் இறப்பை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தியலிங்கம், மாநில துணை தலைவர் சின்னதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் ஒகி புயலால் கடலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் செந்தில்குமார், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கோகுல், மாநில ஒன்றிய செயலாளர் சக்திவேல், வெங்கடேசன், தம்பிரமேஷ், கருணாநிதி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News