செய்திகள்

முதலமைச்சருக்கான விளையாட்டு போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருவாய் அதிகாரி பரிசு வழங்கினார்

Published On 2017-12-14 16:17 GMT   |   Update On 2017-12-14 16:17 GMT
அரியலூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வருவாய் அதிகாரி பரிசுகள் வழங்கினார்.
அரியலூர்:

அரியலூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஹாக்கி, கூடைபந்து, கையுந்து பந்து, மேசைபந்து, இறகு பந்து, கால் பந்து, டென்னிஸ், நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சுமார் 2ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா வரவேற்று பேசினார். ஆர்டிஓ மோகனராஜன், தாசில்தார் முத்துலெட்சுமி, கமிஷனர் பிரபாகரன், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பிச்சையா, பயிற்சியாளர்கள் சதிஷ்குமார்,ஹரிகரன், பொற் கொடி, லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். வளைகோல் பந்து பயிற்சியாளர் லெனின் நன்றி கூறினார்.
Tags:    

Similar News