செய்திகள்

ஏழாவது ஊதியகுழுவில் உள்ள முரண்பாடுகளை கலைய கோரி 18-ந் தேதி உண்ணாவிரதம்

Published On 2017-12-12 15:11 GMT   |   Update On 2017-12-12 15:11 GMT
ஏழாவது ஊதியகுழுவில் உள்ள முரன்பாடுகளை கலைய கோரி சென்னை பள்ளிகல்வி இயக்குனரகம் முன்பு வரும் 18ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக பள்ளி கல்விதுறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரியலூர்:

சென்னையில் பள்ளி கல்வி இயக்குனரகம் முன்பு 18-ந் தேதி உண்ணாவிரதம் பள்ளி கல்விதுறை அலுவலர் சங்கம் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகல்விதுறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நீதிமணி தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி முன்னிலையில் மாவட்ட தலைவர் சதீஷ் வரவேற்று பேசினார்.பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் முருகன், முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத், அமைப்பு செயலாளர் குலாம்ரபிக், தலைமைநிலைய செயலாளர் ராம்மூர்த்தி உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ஏழாவது ஊதியகுழுவில் உள்ள முரன்பாடுகளை கலைய வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், பணிவரை முறை, தகுதிக்கான் பருவம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தினால் சென்னை பள்ளிகல்வி இயக்குனரகம் முன்பு வரும் 18ம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News