செய்திகள்

குடிசை மாற்று வாரிய வீட்டை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி

Published On 2017-11-28 11:59 GMT   |   Update On 2017-11-28 12:00 GMT
குடிசை மாற்று வாரியத்தால் வீடு பெற்றவர்கள், வீட்டை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

குடிசை வீடுகளின் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்படுகிறது. வீடு கிடைக்கப் பெற்றவர்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் குடிசையிலே வசிப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், கென்னூர் சாலையை ஆக்கிரமித்து பலர் குடிசை அமைத்துள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பை அறிவித்தனர். கென்னூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

குடிசை மாற்று வாரியத்தால் வீடு பெற்றவர்கள், வீட்டை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதிகள், குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு பெற்றவர்களின் புகைப்படம் உள்ளிட்ட அடையாள அட்டையை வீட்டில் ஒட்ட வேண்டும் எனவும் கூறினர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வீடு பெற்றவர்கள் தங்களது விபரங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும், அப்படி தெரிவிக்காத பட்சத்தில் ஒதுக்கீட்டை ரத்து செய்து வேறு ஒருவருக்கு அதே வீட்டை ஒதுக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News