செய்திகள்

ஈரோட்டில் மனைவி கண் எதிரே சமையல் தொழிலாளி தற்கொலை

Published On 2017-11-26 16:59 IST   |   Update On 2017-11-26 16:59:00 IST
ஈரோட்டில் கணவர் வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு சாஸ்திரிநகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). சமையல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விமலா தேவி.

கார்த்திக் கடந்த சில நாட்களாகவே சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் விமலா தேவி வேலைக்கு செல்லுங்கள் என்று கணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விமலா தேவி அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கார்த்திக் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது திடீரென கார்த்திக் தூக்குப்போட்டு கொண்டார்.

அதே சமயம் தாய் வீட்டில் இருந்து திரும்பி வந்த விமலாதேவி கணவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கி கார்த்திகை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News