செய்திகள்

வீடு - வீடாக கள ஆய்வு: வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க வாய்ப்பு

Published On 2017-11-23 11:56 GMT   |   Update On 2017-11-23 11:57 GMT
ஈரோட்டில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்திலுள்ள வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் சிறப்பு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 1.1.2018-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 15.11.2017 முதல் 30.11.2017 வரை நேரடியாக வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்திலுள்ள வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் சிறப்பு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இக்கள ஆய்வின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும்பொழுது பொது மக்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், அயல்நாடு வாழ் வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படவேண்டிய விபரம் அளித்தல் வேண்டும்.

மேலும் இறந்த மற்றும் குடிபெயர்ந்த குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை அளித்தல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கோரும் இதர விபரங்களை அளிக்கவும், மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும் பொழுது வீட்டின் கதவுகள் நிரந்தரமாக பூட்டப்பட்டிருப்பின் விபரங்களின் அடிப்படையில் அவ்வீட்டின் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்படும்.

எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விபரங்களை முழுமையாக அளித்து வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், முகவரி திருத்தம் செய்வதற்கும், இறந்த மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர்களை நீக்குவதற்கும், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரபாகர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News