செய்திகள்
காஞ்சீபுரம் நகராட்சி கமி‌ஷனர் வீடு

காஞ்சீபுரம் நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

Published On 2017-11-23 10:32 IST   |   Update On 2017-11-23 10:33:00 IST
காஞ்சீபுரம் நகராட்சி கமி‌ஷனர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நகராட்சி கமி‌ஷனரா பணியாற்றி வருபவர் சர்தார். இவர் காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

சர்தார் மீது லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சர்தார் வீட்டில் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

டி.எஸ்.பி. சிவபாதக சேகரன் தலைமையில் 8 அதிகாரிகள் இந்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சர்தார் வீட்டின் கதவை மூடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் உள்ள சர்தாரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

சர்தாரின் மனைவி மற்றும் குழந்தைகள் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். அங்கும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

நகராட்சி கமி‌ஷனர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News