செய்திகள்

அரியலூர் அருகே சஸ்பெண்டு செய்யப்பட்டதால் ரே‌ஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை

Published On 2017-11-22 10:11 GMT   |   Update On 2017-11-22 10:11 GMT
அரியலூர் அருகே பணியிடை நீக்கம் செய்த காரணத்தால் ரே‌ஷன் கடை பெண் ஊழியர் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜராஜசோழன். இவரது மனைவி நிவேதா (வயது 26). இவர் கழுவன் தோண்டி கிராமத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பறக்கும் படை அதிகாரிகள் ரே‌ஷன் கடையில் ஆய்வு செய்தபோது, சரக்கு குறைவாக இருந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் தயாளன், நிவேதாவை பணியிடை நீக்கம் செய்தார். இதனால் அவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணியிடைநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக மனமுடைந்து நிவேதா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News