செய்திகள்

அச்சிறுப்பாக்கத்தில் கடனை திருப்பிக் கேட்ட நர்சு மீது தாக்குதல்: 4 பேர் கைது

Published On 2017-11-21 09:26 GMT   |   Update On 2017-11-21 09:26 GMT
அச்சிறுப்பாக்கத்தில் ரூ.10 ஆயிரம் கடனை திருப்பிக் கேட்ட நர்சு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக டாக்டர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்:

அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டையில் வசித்து வருபவர் இல்லா மல்லி. அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவர் சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பாண்டியனுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை கடனாக கொடுத்திருந்தார். இதில் அவர் ரூ.10 ஆயிரம் மட்டும், மீதி தொகை பாண்டியன் கொடுக்க வேண்டும் என்று தெரிகிறது.

இதனை இல்லா மல்லி அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் பாண்டியனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனை அறிந்த கடலூரில் வசிக்கும் பாண்டியனின் மனைவி ஜெயலட்சுமி, அவரது மகன்கள் டாக்டர் சுபாஷ், சுரேஷ் மற்றும் உறவினரான பண்ரூட்டியை சேர்ந்த பல் டாக்டர் தாமரைச் செல்வன் ஆகியோர் நேற்று இரவு இல்லா மல்லி வீட்டுக்கு வந்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 4 பேரும் இல்லாமல்லியை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இல்லா மல்லி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமி, டாக்டர் சுபாஷ், சுரேஷ், பல் டாக்டர் தாமரைச் செல்வன் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News