செய்திகள்

சோழிங்கநல்லூரில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2017-11-21 13:54 IST   |   Update On 2017-11-21 13:54:00 IST
சோழிங்கநல்லூரில் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:

நீலாங்கரை சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் தமிழரசன். இவரது மகன் கோகுல் பிரசாந்த். நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிக்கு சென்று திரும்பிய கோகுல் பிரசாந்த் சோகமாக காணப்பட்டார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோகுல் பிரசாந்த் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. கோகுல் பிரசாந்ந்திடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒரு பிரச்சினை தொடர்பாக கண்டித்து அறிவுரை கூறியதாக தெரிகிறது.

இதில் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News