செய்திகள்

வணிக நிறுவனங்கள்-தனி நபர் கூப்பன்-குலுக்கல் திட்டத்தில் பொருட்கள் வழங்க தடை: கலெக்டர் உத்தரவு

Published On 2017-11-21 07:29 GMT   |   Update On 2017-11-21 07:29 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிநபர், விற்பனை கூடங்கள், வணிக நிறுவனங்கள் என யாரும் தங்களின் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன், குலுக்கல் திட்டங்கள் நடத்தி பொருட்கள் வழங்ககூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் பரிசுகள் வழங்கும் குலுக்கல் திட்டத்தை நடத்துகின்றனர்.

இதன் மூலம் பொருட்களை விலை அதிகரித்து விற்பது தரமற்ற பொருட்களை வழங்குவது எடை குறைந்த பழைய ஸ்டாக்கில் உள்ள பொருட்களை வழங்குவதாகவும் இதன் மூலம் நுகர்வோர்கள் வணிகர்களால் ஏமாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிநபர், விற்பனை கூடங்கள், வணிக நிறுவனங்கள் என யாரும் தங்களின் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன், குலுக்கல் திட்டங்கள் நடத்தி பொருட்கள் வழங்ககூடாது. மீறி வழங்கினால் தமிழ்நாடு பரிசுதிட்டம் தடுப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News