செய்திகள்
பெருந்துறை அருகே கார் கடத்தல்: டிரைவரிடம் விசாரணை
பெருந்துறை அருகே டிரைவரை கட்டி போட்டு காரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை, கோவை மெயின் ரோடு, காமாட்சி காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரஜினி என்கிற மனோகரன் (வயது 47). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கும், ஆக்டிங் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவர் பெருந்துறையில் இருந்தபோது இவருக்கு பழக்கமான சபாபதி, செந்தில் மற்றும் ரகு ஆகியோர் மனோகரனிடம் வந்தனர்.
அவர்கள் மனோகரனிடம் பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் சூரியம்பாளையம் பகுதியில் மண்ணுளி பாம்பு குறைந்த விலையில் கிடைப்பதாகவும், அதை வாங்கி நாம் வேறு இடத்தில் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய மனோகரன் தனது காரில் சபாபதி, செந்தில், ரகு ஆகியோருடன் சென்றார். ஆனால் அவர்கள் சொன்ன சூரியம்பாளையம் பகுதிக்கு செல்லாமல் காரை மெயின் ரோட்டிலேயே ஓட்டிச்செல்லுமாறு கூறினர்.
மனோகரனும் அவர்கள் கூறிய வழியில் காரை ஓட்டி சென்றார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சித்தோடு பகுதியில் உள்ள பெருமாள் செட்டியார் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஏற்கனவே இருந்த 3 பேர் மனோகரனை அருகில் இருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்து அவரது காரை அங்கிருந்து கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஏமாற்றி காரை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் மனோகரனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.