செய்திகள்

சென்னை சுங்கத்துறையின் இணையதளத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முடக்கினர்

Published On 2017-11-17 18:48 IST   |   Update On 2017-11-17 18:48:00 IST
சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘www.chennaicustoms.gov.in’ இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கி வைத்தனர்.

சென்னை:

சென்னை மண்டல சுங்கத்துறையினரால் ‘www.chennaicustoms.gov.in’ என்னும் இணையதளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று இந்த இணையதளம் சில ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

அந்த இணையதளத்தை ‘டீன் பாக் சைபர் ஸ்கல்ஸ்’ என்னும் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இணையதளத்தை முடக்கிய அவர்கள் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான வாக்கியங்களை பதிவு செய்தனர். மேலும்  பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருந்தனர்.

சிறிது நேரத்தில் இணையதளம் முடக்கப்பட்டதை தெரிந்துகொண்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இணையதளத்தில் ஏற்பட்ட இடர்பாட்டினை சீர்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் சென்னை சுங்கத்துறை இணையதளத்தை வேறு சில ஹேக்கர்கள் முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News