செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: 3 பேர் படுகாயம்
மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள பிச்சனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 43). இவரது தாய் சேதுமணி (60) மற்றும் மனோகரன் மகன் சத்தியபிரியன் (2) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் குழவடையான் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
காட்டுக்கொல்லை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மனோகரன், சேதுமணி, சத்தியபிரியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நாகை மாவட்டம், குத்தலாம் கூடலூர் மேலத்தெருவை சேர்ந்த மச்சேந்திரர் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.