செய்திகள்

புதுக்கடை, ராஜாக்கமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2017-11-02 21:17 IST   |   Update On 2017-11-02 21:17:00 IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

இனயம் பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ். இவரது மனைவி  பணியடிமை (வயது40). நேற்று மாலை  தனது வீட்டில் இருந்து சின்னத்துறை நோக்கி பனிஅடிமை  நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக குளச்சல் மாதா காலனியைச் சேர்ந்த செனில் (17) என்பவர் மோட்டார் சைக்கிளில்  வந்தார். எதிர்பாராதவிதமாக அந்த  மோட்டார் சைக்கிள் பணிஅடிமை மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பனியடிமை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜாக்கமங்கலம் அரசர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 70). இவர் ராஜாக்கமங்கலத்தில் இருந்து காக்காத்தோப்பு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் மணிக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த தக்கலையைச் சேர்ந்த அரவிந்த் (18) என்பவரும் காயம் அடைந்தார். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News